தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தெரிந்துகொள்வோம்!

தெரிந்துகொள்வோம்!

தெரிந்துகொள்வோம்!


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓர் இயல் எண் 0, 2, 4, 6, 8 ஆகிய இரட்டைப்படை எண்களில் முடிவடைந்தால், அது இரண்டால் வகுபடும்.

உதாரணமாக, 12,496 என்ற எண் இரண்டால் வகுபடும். ஆனால், 1,37,983 என்ற எண், 3 எனும் ஒற்றைப்படை எண்ணில் முடிவடைவதால், இரண்டால் வகுபடாது.

ஓர் இயல் எண்ணுடைய இலக்கங்களின் கூட்டுத்தொகை மூன்றால் வகுபட்டால், அந்த இயல் எண்ணும் மூன்றால் மீதியின்றி வகுபடும்.

உதாரணமாக, 93,20,655 என்ற எண்ணின் இலக்கங்களின் கூடுதல் மதிப்பு 9+3+2+0+6+5+5 = 30.

இது, மூன்றால் வகுபடும் என்பதால் 93,20,655 மூன்றால் வகுபடும்.

ஓர் இயல் எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் நான்கால் வகுபட்டால், அந்த இயல் எண்ணும் நான்கால்

வகுபடும். உதாரணமாக, 9,10,884 என்ற எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் 84. இது நான்கால் வகுபடுவதால், 9,10,884 நான்கால் வகுபடும்.

ஓர் இயல் எண் 0 அல்லது 5ல் முடிந்தால், அந்த இயல் எண்ணும் ஐந்தால் வகுபடும்.

ஓர் இயல் எண் இரண்டு மற்றும் மூன்றால் வகுபட்டால் அந்த எண் ஆறால் வகுபடும்.

- பேராசிரியர் 'பை' சிவராமன், தூ.கோ.வைணவக் கல்லூரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us