தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தங்கப் பதக்கத்தில் தங்கம் எங்கே?

தங்கப் பதக்கத்தில் தங்கம் எங்கே?

தங்கப் பதக்கத்தில் தங்கம் எங்கே?


PUBLISHED ON : மார் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பதக்கம் பாக்க கனமா இருக்கே, எவ்வளவு சவரன் இருக்கும்?' என்று தோன்றலாம்.

பெரும்பாலான தங்கப் பதக்கங்கள் முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்படுவது இல்லை. முலாம் பூசப்படுகிறது. ஒலிம்பிக் பதக்கம்? அதுவும் முழுவதும் தங்கத்தால் செய்யப்படுவது கிடையாது.

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1912ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான், கடைசியாக தங்கத்தால் செய்யப்பட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒலிம்பிக் விதிப்படி, அதன் தங்கப் பதக்கங்கள் 6 செ.மீ. விட்டத்திலும், 3 மி.மீ. கனத்திலும் இருக்க வேண்டும். அதில் வெள்ளி 92.5 சதவிகிதமும், தங்கம் 6 கிராமும் இருக்க வேண்டும்.

சில அமைப்புகள் முற்றிலும் தங்கத்தால் செய்த பதக்கங்களை வழங்குகின்றன. நோபல் அமைப்பு ஓர் உதாரணம். இந்த அமைப்பு 1985ஆம் ஆண்டு வரை, 24 காரட் தங்கத்தால் செய்த பதக்கங்களை வழங்கி வந்தது. அதன்பிறகு 18 காரட் தங்கத்தில் செய்து, 24 காரட் தங்கத்தில் முலாம் பூசிய பதக்கங்களை வழங்கத் தொடங்கியது. இந்தப் பதக்கத்தின் எடை 175 கிராம் இருக்கும். பொருளாதாரத் துறைக்கான பதக்கத்தின் எடை 185 கிராம். பொருளாதாரம் என்றாலே கொஞ்சம் வெயிட்டுதானோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us