தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கவிஞர், மேடைப் பேச்சாளர் என பன்முகத் திறன் கொண்ட எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரத்தில் இருக்கும் துள்ளம். என் தந்தை ஆசிரியராகவும் இசை, இலக்கியப் பயிற்சி பெற்றவராகவும் இருந்ததால் அவரிடமே கல்வி கற்கத் தொடங்கினேன். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் தங்கி ஆரம்பக்கல்வி பயின்றேன்.

புராணங்கள், இலக்கணம், வடமொழி, சைவ சமய நூல்கள், உபநிடதங்கள், திருக்குர்ஆன் போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன். படித்து முடித்து ஸ்பென்சர் நிறுவனத்தில் 1906ல் கணக்காளர் வேலைக்குச் சேர்ந்தேன். விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு இருந்ததால் கணக்கர் வேலையை விட்டுவிட்டு தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினேன்.

என்னுடைய அரசியல் குரு பால கங்காதர திலகர்! அன்னிபெசன்ட் அம்மையார், மறைமலை அடிகளார் ஆகியோரின் நட்பும் என்னை உயர்த்தியது. புரட்சிகரமான எழுத்துகளால், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களைப் பொங்கி எழச்செய்தேன். 'தேச பக்தன்' பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. நவசக்தி வார இதழை 1920ல் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தி, மக்களின் தேசபக்தியைத் தூண்டினேன்.

'இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்' என்ற தீர்மானத்தை, சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் கொண்டுவந்தேன். காந்தியடிகள் சென்னைக் கூட்டத்தில் பேசியதை அற்புதமாக மொழிபெயர்த்ததால் காந்தியடிகளிடம் பாராட்டும் பெற்று இருக்கிறேன்.

முதன்முதலாக, 1918ல் சென்னையில் தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தேன். 1926ல் அரசியலைத் துறந்து பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை, மாதர் சங்கம், கைம்மைப் பெண்கள் கழகம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினேன். பல்வேறு துறைகளில் பல நூல்களையும் எழுதி இருக்கிறேன்.

புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை, தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் மக்கள் என்னைப் புகழ்ந்தார்கள். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 'தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்' என்று என்னைப் பாராட்டி இருக்கிறார்.

திரு.வி.கலியாணசுந்தரனார்

பிறப்பு: ஆகஸ்ட் 26, 1883

மறைவு: செப்டம்பர் 17, 1953

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us