தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புயலுக்கெல்லாம் பேரு வைக்கிறது யாரு?

புயலுக்கெல்லாம் பேரு வைக்கிறது யாரு?

புயலுக்கெல்லாம் பேரு வைக்கிறது யாரு?


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தானே' (Thane) புயல், 'ஹுட்ஹுட்' (Hudhud) புயல் என்றெல்லாம் சொல்கிறார்களே… புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்?

அட்லான்டிக் (Atlantic) பகுதி மக்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள். புயல் அடிக்கும் நாளோடு தொடர்புடைய புனிதர்களின் பெயரை, புயலுக்கு வைத்தார்கள், 'புனித ஆன்' (செயின்ட் ஆன் - - Saint Anne), 'ஸான்ட்டா ஆனா'

(Santa Anna') இப்படி!

அமெரிக்காவின் வானிலை மையமான தேசிய வானிலை சேவை (நேஷனல் வெதர் சர்வீஸ் - National Weather Service) புயல்களுக்கு, பெட்ஸி (Betsy), பியூலா (Beulah), டோனா (Donna) என்றெல்லாம் பெண்களின் பெயர்களை வைத்தது.

'எல்லோரும் வெறுக்கும் புயல்களுக்கு பெண்கள் பெயரை வைப்பதா?' என்று பெண்ணுரிமை இயக்கங்கள் குரல் எழுப்பின. அதன் பிறகு, அட்லான்டிக் பகுதி புயல்களுக்கு ஆண்களின் பெயர்களும் வைக்கும் வழக்கம் வந்தது. இது எல்லாம் நடந்தது, 1978-ல்!

இந்தியப் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பங்களாதேஷ் (Bangladesh), இந்தியா (India), மாலத்தீவு (Maldives), மியான்மார் (Myanmar), ஓமன் (Oman), பாகிஸ்தான் (Pakistan), இலங்கை (Sri Lanka), தாய்லாந்து (Thailand) ஆகிய எட்டு நாடுகள், வரிசைப்படி புயல்களுக்குப் பெயர் வைத்துவருகின்றன.

புயல் உருவாகும் பகுதியைப் பொறுத்து, அது வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப் படுகிறது.

அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் புயல் 'ஹரிக்கேன் (Hurricane)', பசிபிக் பெருங்கடலில் உருவானால், 'டைபூன் (Typhoon)'. இந்தியப் பகுதியில் உருவாவது, 'சைக்ளோன் (Cyclone)'.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us