PUBLISHED ON : நவ 19, 2018

தமிழை உயிர் என்றும், உயர்வென்றும், அமுதென்றும் பாடிய புலவர்கள் பலர். அவர்களில் நால்வரின் பாடல்வரிகளை இங்கே கொடுத்துள்ளோம். எந்த வரிகளை யார் பாடியது என்று கண்டறியுங்கள்.
1. நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும்- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
3. தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
4. வெந்தழல் நீராகும் வெள்ளெலும்பு பெண்ணாகும்
வந்தமத வேழம் வணங்கிடுமே -சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்!
விடை
1. பாரதிதாசன்
2. பாரதியார்
3. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
4.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
