தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஜன்னல் பாட்டு!

ஜன்னல் பாட்டு!

ஜன்னல் பாட்டு!


PUBLISHED ON : மே 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் ஜன்னல் கம்பி இருக்கிறதா? நல்லதாப் போச்சு. ஒரு ட்வைன் நூலை (Twine thread) எடுங்கள். கம்பியின் மேல் பகுதியிலும் கீழ்ப் பகுதியிலுமாக அந்த நூலை இறுக்கிக் கட்டுங்கள். ஆச்சா? இப்போது ஒரு தீப்பெட்டியை எடுங்கள். கம்பியின் கீழ்ப் பகுதியில், கம்பிக்கும் நூலுக்கும் இடையில் தீப்பெட்டியின் மருந்துப் பகுதி தொடுவது போல செருகி நிறுத்துங்கள். நூல் முன்பைவிட இறுக்கம் அதிகம் ஆகிறதா… ஆகட்டும்.

இப்போது நூலை மெதுவாக ஆள்காட்டி விரலால் சுண்டுங்கள். என்ன நடக்கிறது? டிங் டிங் என்று இன்னிசைச் சத்தம் கேட்கிறதா? அடுத்து, நூலைச் சுண்டியபடியே, தீப்பெட்டியை மேலும் கீழும் நகர்த்துங்கள். ஒலி அளவு மாறும். அதாவது வெவ்வேறு சுருதிகளில் அந்தச் சத்தம் கேட்கும்.

அடடே, ஜன்னல் கம்பியிலேயே இசை பிறந்துவிட்டதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us