தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வாடிய பயிருக்காக வாடியவர்!

வாடிய பயிருக்காக வாடியவர்!

வாடிய பயிருக்காக வாடியவர்!


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வள்ளலார்' இராமலிங்க அடிகள் பிறந்த தினம் அக்டோபர் 5

(05.10.1823 - 30.01.1873)


“அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்ஜோதி!”

கடவுள் ஒருவரே, அவர் ஒளியாக உள்ளார். மனித உருவம் இல்லாத அவருக்கு, அருள் என்னும் ஆற்றல் உள்ளது என்று இறைவனை ஜோதி வடிவில் கண்டவர். ஜீவகாருண்யம் என்ற கொள்கையைத் தோற்றுவித்து, பசிக்கொடுமையைப் போக்கியவர். அவர்தான் இராமலிங்க அடிகளார்.

சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையாபிள்ளை - சின்னம்மையார் தம்பதியருக்கு மகனாக, 1823ஆம் ஆண்டில் பிறந்தார். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருவருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். இளம் பருவத்திலேயே, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் இவருக்கு இருந்தது. பசியுடன் வருபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, உதவிகள் செய்யக்கூடிய பொதுநலம் கொண்டவராக இருந்தார்.

கடலூரை அடுத்த வடலூரில் பசியில் வாடும் மக்களுக்காக 'சத்திய ஞான சபை' என்னும் தரும சாலையைத் தொடங்கினார். சாதி, மதம், மொழி என்ற வேறுபாடு பார்க்காமல், மடத்தைத் தேடி வரும் அனைவரின் பசியையும் இன்று வரை போக்கி வருகிறது அந்த மடம்! அந்த மடத்தில் 1867ல் இவரால் ஏற்றப்பட்ட தீப ஜோதி இன்றும் அணையாமல் எரிந்து பலரின் பசியைப் போக்கிக்கொண்டு இருக்கிறது.

“எந்த உயிரையும் கொல்லக்கூடாது, பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்” என்பன போன்ற முற்போக்கான கருத்துக்களைக் கூறினார்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்' என்று பாடிய வள்ளலார் இந்த உலகைவிட்டுச் சென்றாலும், பிறரின் பசி போக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்!

* வடலூர் விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்க, அங்கு 1865ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றியதால் 'வள்ளலார்' எனப் போற்றப்பட்டார்.

* வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. அவை ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளன.

* இந்திய அரசு இவரது சேவையைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 17, 2007ல் தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us