உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 11, 2016

அ நிறம் | அளவு
“பெண்களால் ராணுவத்தில் ஆண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்க முடியும். ராணுவத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில் உள்ள உள்கட்டமைப்புப் பிரச்னைகள் சரி செய்யப்படும். முப்படைகளுக்கும் தளபதிகளாக பெண்கள் நியமிக்கப்படும் காலம் விரைவில் வரும்'' என்று மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் நம்பிக்கை தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற 'ஃபிக்கி' (FICCI) கூட்டமைப்பின் மகளிர் பிரிவினர் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அவர், “பெண்களை ஜான்சி ராணியாகவும், கடவுளாகவும் சித்தரித்துப் பெருமைப்படுத்துகிறோம். அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வாய்ப்புகளை வழங்க வேண்டியதே தற்காலத்தின் அவசியம்” என்று கூறியுள்ளார்.
