நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
102 வயதிலும், ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லாது, மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கி வியக்க வைக்கிறார் புனேவைச் சேர்ந்த டாக்டர் பல்வந்த் காட்பாண்டே. சோம்பியிருப்பது தனக்கு ஒருபோதும் பிடிக்காத விஷயம் என்கிறார், இந்த டாக்டர் தாத்தா.
சத்தான உணவுப் பழக்கம், தேவையான உடற்பயிற்சி ஆகிய இரண்டையும், தனது ஆரோக்கியத்திற்கான காரணிகளாகச் சொல்லும் பல்வந்த், நோயாளிகளிடம் 30 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குகிறார். அவரது வருமானத்தின் பெரும்பகுதியை தர்ம காரியங்களுக்கே செலவழிக்கிறார்.