PUBLISHED ON : டிச 26, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிட்டனைச் சேர்ந்தவர் லிசா டென்னிஸ், 40. இவர், 83.98 நொடிகளில், 1,000 தட்டோடுகளை (டைல்ஸ்) வேகமாக உடைத்த பெண் என்ற சாதனையைப் புரிந்திருந்தார். இந்நிலையில், மேலும் ஒரு சாதனையாக, 60 நொடிகளில், 923 தட்டோடுகளை உடைத்து, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பத்து பத்தாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டோடுகளை, மாறி மாறி இருகைகளாலும் உடைத்து தள்ளியது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன், 51.08 நொடிகளில், 1,000 தட்டோடுகளை வேகமாக உடைத்த ஆண் என்ற சாதனையை படைத்துள்ளார்.