தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாணவர்களுக்கான யோகப்பயிற்சிகள்

மாணவர்களுக்கான யோகப்பயிற்சிகள்

மாணவர்களுக்கான யோகப்பயிற்சிகள்


PUBLISHED ON : மே 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உஷ்ட்ராசனம்

'உஷ்ட்ரா' என்றால் ஒட்டகம். இந்த ஆசனம் செய்யும்போது, ஒட்டகத்தின் திமில் போன்று நமது உடல் அமையும் என்பதால், இந்த ஆசனத்துக்கு இப்பெயர்.

செய்யும் முறை:

• கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும்.

• உள்ளங்கைகளை தரையில் தொடைக்கருகில் வைத்துக் கொள்ளவும்.

• வலது காலை மடக்கி, வலது குதிகால் மேல் அமர்ந்து கொள்ளவும்.

• இடதுகாலையும் மடக்கி, இரண்டு குதிகால்களிலும் உட்கார்ந்து கொள்ளவும்.

• முட்டி போட்டு நின்று கொள்ளவும். இரண்டு முட்டிக்கும் இடையில் சிறிது இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம். ஒரு சாண் இடைவெளி போதுமானது.

• கைகளைப் பின்பக்கம் கொண்டு சென்று, மூச்சிழுத்துக் கொண்டே பின்னே வளைந்து கைகளை குதிகால்களில் வைத்து, உடலை இடுப்பிலிருந்து வளைத்து, முட்டியில் உடல் பருமனை அழுத்தி நின்று கொள்ளவும்.

• பத்து முறை சீராக மூச்சை இழுத்து விடவும்.

• பிறகு மூச்சை வெளிவிட்டபடியே, கைகளை கால்களிலிருந்து எடுத்து நிமிர்ந்து வந்து, முட்டி போட்டு நின்று கொள்ளவும்.

• இரண்டு மூட்டையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

• இரண்டு குதிகால்களிலும் அமர்ந்து கொள்ளவும்.

• இடது காலை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.

• வலது காலையும் விடுவித்துக் கொள்ளவும். ஆரம்ப நிலைக்கு வரவும். சிறிது ஓய்வாக அமர்ந்து கொள்ளவும்.

பயன்கள்

• முதுகு, இடுப்பு வலுப்பெறுகிறது.

• வயிற்றுத் தசைகள் ஓய்வு பெறுவதால், செரிமானம் நன்கு நடக்கிறது.

• நரம்புகள் நன்கு தூண்டப்படுகின்றன.

• தலைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஞாபகசக்தி அதிகரிக்கிறது.

• மூச்சு பிரச்னைகள் வராமல் தடுக்கமுடியும்.

- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us