PUBLISHED ON : மார் 19, 2018

அ நிறம் | அளவு
பாரம்பரியம் மிக்க நீலகிரி மலை ரயில், கோடை விடுமுறையை ஒட்டி, மார்ச் 31 முதல் ஜூன் 24 ஆம் தேதிவரை சிறப்புச் சேவையை ஆரம்பிக்க உள்ளது. வார நாட்களில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மட்டுமே செல்லும் இந்த ரயில், சனி, ஞாயிறு இரு தினங்களில் மட்டும் மேட்டுப்பாளையம் -- குன்னூர் வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளது. காலை 9.10க்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பி 12.30க்கு குன்னூரை அடையும். மதியம் 1.30க்கு குன்னூரிலிருந்து இருந்து கிளம்பி மாலை 4.30க்கு மேட்டுப்பாளையத்தை அடையும். இந்தச் சிறப்பு சேவைக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
