பொன்விழா கொண்டாட்டத்தில் பந்திப்பூர் புலிகள் சரணாலயம்
பொன்விழா கொண்டாட்டத்தில் பந்திப்பூர் புலிகள் சரணாலயம்
PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

![]() |
நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் மிகவும் பிரபலமான வனவிலங்கு காப்பகங்களில் ஒன்றாகும். விலங்குகள் மற்றும் பறவைகள் அதனதன் இயற்கையான சூழலில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக விளங்குகிறது.
![]() |
1974 ஆம் ஆண்டு 12 புலிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த புலிகள் சரணாலயம் இன்று 173 புலிகளுடன் நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் சரணாலயமாக விளங்குகிறது.
![]() |
புலிகள் மட்டுமின்றி இங்கு 3047 யானைகள்,200 சிறுத்தைகள்,பல்வேறு இன மான்கள்,லங்கூர் குரங்குள்,காட்டெருமை,கரடி,செந்நாய் என விலங்குகளும் நிறைய பறவை இனங்களும் உள்ளன,
874 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவானது, கேரளாவின் வயநாடு மற்றும் தமிழகத்தில் முதுமலையை எல்லையாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் காட்டுயிர்களை படமெடுக்கும் புகைப்படக்கலைஞர்களின் முதல் தேர்வாகவும் பந்திப்பூர் விளங்குகிறது.
![]() |
மைசூரில் இருந்து ஊட்டி போகும் வழியில் உள்ள இந்த சரணாலயம் மைசூரில் இருந்து 80 கி.மீட்டர் துாரத்திலும்,ஊட்டியில் இருந்து 78 கி.மீட்டர் துாரத்திலும் உள்ளது.விலங்குகள் நடமாட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சரணாலயம் பக்கம் உள்ள ரோட்டில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கார்,பஸ் மூலமாக பண்டிப்பூர் சென்று விட்டால் அங்கு வனத்துறை ஏற்பாட்டில் ஜீப்,பஸ்சில் மூலம் காட்டுக்குள் சென்று திரும்பலாம், விரும்பினால் அங்கேயே வனத்துறை விடுதியில் தங்கும் வசதியும் உண்டு, ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.அது பற்றிய முழு விவரமும் அறிய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகளானதை அடுத்து பொன் விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்து அவரும் காட்டிற்குள் சென்று விலங்குகளை பார்த்துவந்தார்.
ஆனால் அன்று அவருக்கு புலி,சிறுத்தை உள்ளீட்ட முக்கிய விலங்குகள் கண்ணில் தட்டுப்படவில்லை,புலி தென்படுவது என்பது முழுக்க பார்வையாளர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே,பத்து முறை சபாரி சென்றும் புலிகளை பார்க்காதவர்களும் உண்டு ஒரே முறை சபாரி சென்று அனைத்து விலங்குகளையும் பார்த்தவர்கள் உண்டு என்றார் தற்போது இந்த சரணாலயத்தின் கள இயக்குனராக இருக்கும் தமிழர் பிரபாகரன்.
![]() |
பொன் விழா கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக தினமலர் இதழுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பின் காரணமாக, அவரது விருந்தினராக போய் வந்தோம்.
https://bandipurtigerreserve.org
-எல்.முருகராஜ்