உலக நட்பு தினத்தில் நெகிழ்ச்சியும்..மகிழ்ச்சியும்...
உலக நட்பு தினத்தில் நெகிழ்ச்சியும்..மகிழ்ச்சியும்...
PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM

கடல் பல தாண்டி,காடு பல கடந்து,நாடு பல ஓடி,கடும் உழைப்பினால்,சேர்த்த செல்வம்,ஒரு கனப் பொழுதில் ஒன்றும் இன்றி கரைந்து போகலாம்!
நோக்கம் பல கொண்டு,ஆக்கம் பல செய்து,அடைந்திட்ட புகழ் அனைத்தும்...ஒரு சிறு பொழுதில்,அடையாளமற்று அழிந்து போகலாம்!
-------ஒரே நாளில்மேலிருப்பவர்,கீழ் இறங்கலாம்!ஒரே இரவில்கீழ் இருப்பவர்,மேல் ஏறலாம்!
-------இந்த தலைகீழ் மாற்றத்தை,இந்த தரணி நமக்கு தானமாய் தந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் நாம் கற்றக் கல்வி,நாம் பெற்ற அறிவு!நாம் நீங்கும் வரை,நமை நீங்காது!
------கல்விஅயராதது!கல்விஅசராதது!கல்விஅழியாதது!
--கல்வி கற்பவர்களுக்கு அதுஎன்றும் சேதாரமற்ற,ஆதாரம்!
-------மனிதன் எனும் ஒர் விபரிதமான விலங்கை,பண்பட்ட சமுக விலங்காக மாற்றும் ஒரே காரணி கல்வி!
----இப்படிப்பட்ட அற்புதமான கல்வியைத் தந்த இந்த புனித வளனார் கல்வி வளாகத்தை வணங்கி மகிழ்வோம்..என்று லியோ மாலிஸ் வின்சென்ட் பேசிய போது அந்த அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.
இந்த சந்திப்பிற்கு ஒரு வருடமாக சிந்தித்து முன்னாள் மாணவர்கள் செயலாற்றினர் காரணம் பலர் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் செட்டிலாகியிருந்தனர்.