sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

புத்தம் புது வாசம், புத்தகத்தின் தேசம்..

/

புத்தம் புது வாசம், புத்தகத்தின் தேசம்..

புத்தம் புது வாசம், புத்தகத்தின் தேசம்..

புத்தம் புது வாசம், புத்தகத்தின் தேசம்..


PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1362267

சென்னை புத்தகக்காட்சியில் களைகட்டும் வாசகர் கூட்டம்.

சென்னை நந்தனத்தில் நடந்துவரும் 48 வது புத்தகக்காட்சியைக் காணவும், புத்தகங்கள் வாங்கவும் வாசகர்கள் திரளாக வந்திருந்தனர்.

இந்த வருடம் புது முயற்சியாக வாசகர்கள் ஒய்வு அறையை அரங்கிற்குள்ளேயே அமைத்துள்ளனர்,இதனால் புத்தகம் வாங்க நடந்து நடந்து களைத்துப் போன வாசகர்களுக்கும்,வாங்கிய புத்தகங்களை அங்கேயே வைத்து ஆர்வமுடன் புரட்டிப்பார்க்க விரும்பும் வாசகர்களுக்கும் இந்த இருக்கை வசதிகளுடன் கூடிய ஒய்வு அறையை பெரிதும் வசதியாக இருக்கிறது.Image 1362268விடுமுறை நாட்களில் பகல் 11 மணிக்கே புத்தகக்காட்சி திறக்கப்படும்,நேற்று முதல் விடுமுறை நாள் என்பதை கவனத்தில் கொண்டு வாசகர்கள் 11 மணிக்கே அரங்கிற்குள் வந்துவிட்டனர்.

வரும் வாசகர்கள் நுழைவுக்கட்டணம் பெற கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படவேண்டாம் என்பதற்காக ஆங்காங்கே நின்று டிக்கெட் விற்கின்றனர் இதுவும் நல்ல விஷயமே.

புத்தகக்காட்சியில் விற்கப்படும் அனைத்து புத்தகங்களும் பத்துசதவீதம் தள்ளுபடி என்றாலும் சில புத்தகக்கடையில் தங்களது புத்தகங்களை ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடியிலும் தருகின்றனர்.Image 1362270

புத்தக்க் காட்சியில் இடம் பெற்றுள்ள தினமலர் அரங்கில்(ஸ்டால் எண் 45 மற்றும் 46)தினமலர் ஒரு வருட சந்தா செலுத்தினால் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை இலவசமாக பெறலாம் என்பதால் வாசகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

ஆன்மீகம்,பயணக்கட்டுரை,தன்னம்பிக்கை,போட்டித் தேர்வு,மருத்துவம்,நகைச்சுவை,தேசியம்,வீர வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்துள்ளது ,அது மட்டுமல்ல தினமலர் வாரமலர் வாசகர்களின் அபிமானம் பெற்ற அந்துமணி எழுதிய அனைத்து புத்தகங்களும் இங்கு கிடைக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி விற்றுத்தீர்ந்த தினமலர் காலண்டர் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ,புத்தகக்காட்சிக்கு வந்தால் தங்கள் வருத்தத்தை தீர்த்துக் கொள்ளலாம் ஆம் தினமலர் அரங்கில் தினமலர் காலண்டர் விற்பனை செய்யப்படுகிறது.ஸ்டாக் தீர்வதற்குள் வந்து வாங்கிக் கொள்ளலாம்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us