ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் மறைக்கப்பட்ட கலைகளை காட்சிப்படுத்தும் வகையில் சென்னை வர்தகம மையத்தில் நடைபெற்ற ஒரு நாள் கலைச் சங்கம நிகழ்வு பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தது. ற்க்கும் மேற்பட்ட பழங்குடியினர்களின் பொய்க்கால் குதிரை ,பொம்மலாட்டம் உள்ளீட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன அவர்கள் சம்பந்தப்பட்ட 300க்கும் அதிகமான புகைப்படங்கள்,ஒவியங்களும் காட்டசிப்படுத்தப்பட்டு இருந்தன.கட்ட மறக்க,கோமடி சங்கு உள்ளீட்ட பல்வேறு பழமையான வாத்தியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலை சங்கமத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லவேண்டும் கூடவே குறைந்த பட்சம் மூன்று நாட்கள் நடத்தவேண்டும்.படங்கள்:காளீஸ்வரன்.