PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM


அந்த அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்காக நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் ஆர்வமும் சந்தோஷமும் பொங்கிவழிகிறது.
நாடு முழுவதிலும் இருந்து 1,476 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,வட்டெறிதல்,ஒட்டம்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதால் என்று 155 போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் பங்கேற்று வீரர்கள் தத்தம் திறமையை வெளிப்படுத்திய விதம் பார்க்க பெருமையாக இருந்தது அதிலும் பார்வை இல்லாதவர்கள் நீளம் தாண்டுதல் மற்றும் வட்டெறிதல் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை காட்டிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களும் பல லட்சம் ரொக்கப் பரிசுகளும் கிடைக்கிறது,மத்திய மாநில அரசுகள் நன்றாக ஊக்கம் தருகிறது.
இது போன்ற போட்டிகளை பார்ப்பதும் பங்கேற்பதும் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றிப்போடும்.
-எல்.முருகராஜ்

