ஒரே இடத்தில் பாரத நாட்டியங்கள்:பிரம்மோற்சவத்தில் கோலகலம்!
ஒரே இடத்தில் பாரத நாட்டியங்கள்:பிரம்மோற்சவத்தில் கோலகலம்!
PUBLISHED ON : செப் 21, 2026 09:03 PM

திருமலை திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் என்றாலே பக்தர்களின் மனக்கண்ணில் மிளிர்வது கம்பீரமான வாகனச் சேவைகளும், 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தர்களின் முழக்கமும்தான். , கடந்த ஏழு நாட்களாகத் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் இறைவனின் உலாவுக்கு முன்பாக அரங்கேறி வரும் அற்புதங்கள், ஆன்மீகத்தையும் கலைகளையும் இணைக்கும் ஒரு பெருவிழாவாக உருவெடுத்துள்ளன!

பஞ்சாபின் துள்ளலான பாங்க்ரா,
ராஜஸ்தானின் வண்ணமயமான கரகம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள்,
கேரளாவின் கம்பீரமான கதகளி மற்றும் சிங்காரி மேளம்,
தமிழ்நாட்டின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
ஸ்ரீநகரின் தனித்துவமான பாரம்பரிய காஷ்மீ்ர் நடனங்கள்
இது வெறும் நடனம் மட்டுமல்ல; ஒவ்வொரு குழுவும் தங்கள் நடன அசைவுகளுக்குள்ளும், முக பாவனைகளிலும் ஒரு சிறிய ஆன்மீகக் கதையையோ, புராண நிகழ்வையோ நாடகமாக நடித்துக் காட்டுகின்றன.

ஏழு நாட்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த ஆன்மீகக் கலைத்திருவிழா, 'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தையும், இறை வழிபாட்டில் கலைகள் வகிக்கும் முக்கியத்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. கோவிந்தனின் அருளோடு இந்த கலை விருந்தைக் காண்பதே ஒரு தனித் தவம்!
-எல்.முருகராஜ்
