தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/திருமலையில் கண் கவரும் பிரம்மோற்சவ மலர் கண்காட்சி

திருமலையில் கண் கவரும் பிரம்மோற்சவ மலர் கண்காட்சி

திருமலையில் கண் கவரும் பிரம்மோற்சவ மலர் கண்காட்சி


PUBLISHED ON : செப் 15, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாண வேதிகை வளாகத்தில் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் 10 நாள் சிறப்பு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.Image 1619585மணல் கலைஞர் திரு. கோவிந்த் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா விஷ்ணுவின் 'கல்கி அவதாரம்' மணல் சிற்பம் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்து வரவேற்பளிக்கிறது.Image 1619586தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களுடன், ராமாயணக் காட்சிகளும் அறிவியல் அதிசயங்களும் எழிலுறப் படைக்கப்பட்டுள்ளன.Image 1619587கிருத, திரேதா, துவாபர மற்றும் கலியுகத்தின் கதைகளையும், புராண நிகழ்வுகளையும் விளக்கும் பிரம்மாண்ட அலங்காரங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

கைவினைஞர்களால் மரம், கல் மற்றும் செங்கற்களைக் கொண்டு நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அரிய சிற்பங்கள் கண்காட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

1960 முதல் 1980 வரையிலான காலகட்டத்தின் பழமையான திருமலை, அல hisபிரி நடைபாதை மற்றும் தற்போதைய திருப்பதியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் 150-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us