PUBLISHED ON : அக் 16, 2019 12:00 AM

சென்னை நங்கநல்லுாரை சேர்ந்தவர் காத்தியாயினிபாங்க் ஒன்றின் மேலாளராக இருந்தவர், தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு பராம்பரிய பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இவரது தயாரிப்புகள் அமெரிக்கா உள்ளீட்ட பல வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளது.






தமிழகத்தில் உள்ள பல கிராம மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பனை ஒலை பொருட்களை தயார் செய்யச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்.பனைஒலையால் செய்யப்படும் பல்வேறு விதமான ஒலைப்பெட்டிகளுக்கு எப்போதுமே டிமாண்டு உண்டு.அசாம்,நாகலாந்து போன்ற வட மாநிலங்களுக்கு சென்று அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சணல் பொருட்களை பொம்மைகளை வாங்கிவந்து விற்கிறார்.
இதன் காரணமாக நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஐம்பது குடும்பங்களுக்கு இவரால் வாழ்வாதாரம் கிடைத்துவருகிறது.வருடம் முழுவதும் பொம்மைகள் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இவர் நவராத்திரி போன்ற நாட்களில் இன்னும் பிசியாகிவிடுவார்.
புதுமையானதும்,தரமானதுமான இவரது பொம்மைகளை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் உள்ளவர்கள் விரும்பி வாங்கிவருகின்றனர்.சாய் சரித்திரா என்ற சாய்பாபா கதை சொல்லும் பொம்மைகளும் ,மெரினா கடற்கரை வாழ் சிறு வியாபாரிகள் பொம்மைகளும் இந்த வருடம் பிரபலமாகிவிட்டது.
பாங்கில் வேலை பார்த்து இருந்தால் நான் மட்டுமே நன்றாக இருந்திருப்பேன் இப்போது என்னைச் சுற்றி உள்ள பல குடும்பத்தினருடன் சேர்ந்து நானும் நன்றாக இருக்கிறேன், என்னால் இவ்வளவு பேர்களுக்கு வேலை கொடுக்க முடிவதை எண்ணி மகிழ்கிறேன் அதை விட பாரம்பரியமான நமது கலைகள் வளர நானும் கரம் கொடுக்கிறேன் என்பதில் இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லும் காத்தியாயினிடம் பேசுவதற்கான எண்:9841695164.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
