sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/அண்ணாமலையாருக்கு அரோகரா

அண்ணாமலையாருக்கு அரோகரா

அண்ணாமலையாருக்கு அரோகரா


PUBLISHED ON : டிச 12, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2019 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

Image 2432241

நினைத்தாலே முக்தி தரும் இடமான திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திற்கு வரும் கூட்டத்தை நினைத்தாலே கொஞ்சம் பக் என்றுதான் இருக்கும், இந்த கூட்டத்திற்குள் நல்லபடியாக போய்விட்டு திரும்பவேண்டுமே என்று ஒரு பக்கம் கவலை இருந்தாலும் அண்ணாமலையாரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்று தைரியமும் இருந்தது.

Image 737476எதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகம்தான் ஆறு மணி தீபத்தை படமெடுக்க இரண்டு மணிக்கே சென்று இடம் பிடித்து உட்கார்ந்தேன்.திரும்பிய பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டம்தான் மாலை ஐந்து மணிக்கு மேல் விநாயகர் சண்டிகேஸ்வரர் உண்ணாமலை சமேதரராய் அண்ணாமலையார் என அனைவரும் சன்னதியைவிட்டு ஆட்டம் பாட்டத்துடன் கொடி மரம் எதிரே உள்ள மண்டபத்தை அடைந்தனர்.

Image 737477 சாமியை துாக்கிவரும் பக்தர்கள் சாமியை அப்படியும் இப்படியுமாக ஆட்டுவதை பார்க்கும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எழுப்பிய அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் அந்த இடத்தையே அதிரவைத்தது.

Image 737478இதெற்கெல்லாம் உச்சமாக அர்த்தநாரீஸ்வரர் ஒரே ஒரு நிமிடம் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி தந்துவிட்டு கோவிலுனுள் சென்றார் அவர் வரும் போது மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து கோவிலினுள் அகண்டதீபம் ஏற்றப்பட்டது.

Image 737479காலையில் இருந்தே ஆரம்பித்த கிரிவலத்தில் இரவு நேரம் நானும் நடந்தேன்.

எங்கே பார்த்தாலும் பக்தர்கள் என்று சொல்லும்படியாக நெருக்கியடித்துக் கொண்டு பக்தர்கள் கிரிவல வீதியில் நடந்துசென்றனர்.இளைஞர்கள் கூட்டம் நிறைய காணப்பட்டது ஆனால் அவர்களிடம் விளையாட்டுத்தனம் அதிகமாக இருந்தது திடீரென குறுக்கே குறுக்கே ஒடுவதும் பீப்பி போன்ற கருவியை வைத்துக் கொண்டு அதிக சப்தம் எழுப்புவதும் அமைதியாக செல்லும் பக்தர்களுக்கு இடையூறாகவே இருந்தது.

வழியெங்கும் பலவிதமான பொருட்களை கூவிக்கூவி விற்கின்றனர் அரைஞான் கயிறு மூன்று பத்து ரூபாய் என்று நுாறு அடிக்கு ஒருவர் விற்றுக்கொண்டு இருக்கிறார் விற்பனையில் சுக்கு காபியும் கரும்புச்சாறும் சக்கை போடுபோட்டது.

வழியில் உள்ள லிங்கங்களை தரிசித்தபடி 14 கிலோமீட்டர் துார கிரிவலப் பாதையை நடந்து முடிக்க நான்கு மணி நேரமானது அவரவர் நடை வேகத்தைப் பொறுத்த இந்த நேரம் கூடலாம் குறையலாம் ஆனால் மலையில் எரியும் மகாதீபத்தை பார்த்தபடி கிரிவலம் வருவது என்பது ஒரு அலாதியான அனுபவம்தான்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us