கடந்த வாரம் வரை ஒரு ஐடி ஊழியராக அறியப்பட்ட தீபு அபிலேஷ் ஒரு அரங்கேற்றத்திற்கு பிறகு பலரும் பாராட்டும் பரத நாட்டியக் கலைஞராக வலம் வருகிறார்.
கிருஷ்ணாஞ்சலி ட்ரஸ்ட் பாலகுருநாதினிடம் பரதநாட்டியம் பயின்ற தீபு அபிலேஷ் சென்னை மைலாப்பூர் சந்திரசேரேந்திர சரஸ்வதி ஹாலில் தனது நாட்டிய அரங்கேற்றத்தை நடத்தினார்.
ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணனின் குழுவினரின் பாட்டு மற்றும் அருமையான இசைக்கேற்ப, விநாயகர் கவுதத்தில் துவங்கி,ஜதீஸ்வரம்,சரஸ்வதி கீதம்,வர்ணம்,கீர்த்தனம் உள்ளீட்ட தலைப்புகளில் பிரமாதமாக நடனமாடினார்.இதில் வர்ணம் என்ற தலைப்பில் 'இன்னும் ஏன் மனம்' என்ற 35 நிமிட பாடலுக்கு தொய்வின்றி மிக அருமையாக நடனமாடினார் தீபு அபிலேஷ்.
கலாச்சேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் முதல்வர் ஜனார்த்தனன் பாராட்டுரை வழங்கினார்,நிகழ்ச்சியை மிக அருமையாக தொகுத்து வழங்கினார் கணேஷ் சண்முகம்,நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசிய தீபு அபிலேஷின் தாயார் கிருஷ்ணவேணி பேசுகையில்,என் மகன் இவ்வளவு பிரமாதமாக நடனமாடுவான் என்று நான் கொஞ்சமும் நினைத்தது இல்லை,உறவினர்,நண்பர்கள் என்று அனைவருமே என் மகனை கொண்டாடுவர்,அவ்வளவு பேரும் பாராட்டும் வகையில் குறையொன்றுமில்லாத கோவிந்தனாகவே வளர்ந்துவருகிறான்,நான்தான் அவனிடம் உனக்கு எதுக்குடா டான்ஸ் என்று குறைப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்போது அவனது நடனத்தைப் பார்த்த பிறகு நானே அவனை இன்னும் நிறைய நடனமாடவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று நெகிழ்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் பேசினார்.