PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

பாண்டிச்சேரி ஆர்ட் அகடெமியின் 8 வது தேசிய அளவிலான பெண் ஓவியர்களின் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித் கலா அகடமியில் நடைபெற்றது.
அகடமியின் செயலாளர் ஓவியர் ஸ்ரீதளாதேவி வாழ்த்துரை வழங்கினார். கண்காட்சியின் கேட்டலாக் புத்தகத்தை மூத்த பெண் ஓவியர் மற்றும் கலாக்ஷேத்ராவின் விசுவல் ஆர்ட்ஸ் துறையின் முன்னாள் தலைவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். முதல் புத்தகத்தை பெண் ஓவியர் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின், உறுப்பினர் செயலாளர் சுதா ராமன் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக ஓவியர் மற்றும் லலித் கலா அகடேமியின் மண்டல செயலாளர் சோவன் குமார் பங்கேற்றார். அகடெமியின் தலைவர், மூத்த ஓவியர் சேகர் நன்றி கூறினார்.