PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் போட்டோ வீடியோ கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
போட்டோ மற்றும் வீடியோ தொழிலில் எந்த அளவிற்கு முன்னேற்றம் வந்துள்ளது என்பதை அறிய இந்த தொழிலில் இருப்பவர்கள் இங்கு வருவர்.
அப்படி வருபவர்கள் தங்களது கேமராக்களில் படமெடுத்து பார்ப்பதற்காக அரங்கினுள் பேஷன் ஷோ என்ப்படும் ஆடை அலங்கார கண்காட்சி நடைபெறும்.
பேஷன் ஷோவிற்குரிய லைட்டிங் இல்லை என்றாலும் கேமராவின் நவீன டெக்னாலாஜியில் படங்களை துல்லியமாக படமாக்கிக் கொண்டிருந்தனர் கலைஞர்கள்.
உண்மையில் இதுவும் ஒரு பாடம்தான், எந்தமாதிரியான 'லைட்' செட்டிங்குகளிலும் தனது படங்களில் அழகுணர்வைக் கொண்டுவருபவன்தானே மெய்யான கலைஞன்...
-எல்.முருகராஜ்