PUBLISHED ON : பிப் 14, 2026 03:34 PM

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கேரளா சுற்றுலாத்துறையினர் நடத்திய கலை விழா, கேரளாவின் பசுமை மாறா அழகை மட்டுமல்லாமல், அதன் ஆழமான ஆன்மீக மற்றும் கலாச்சார வேர்களையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்த விழாவின் சிறப்பம்சமாக, கேரளாவின் பாரம்பரிய தெய்வீகக் கலை வடிவங்களான கதகளி மற்றும் தைய்யம் கலைஞர்களின் அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சொற்கள் ஏதுமின்றி, கண்களின் அசைவு மற்றும் ஆட்டத்தின் வேகத்தின் மூலமே உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இதன் தனிச்சிறப்பு.
வடக்கு மலபார் பகுதியில் பிரசித்தி பெற்ற தைய்யம், வெறும் கலை மட்டுமல்ல, அது ஒரு புனிதமான சடங்கு. தைய்யம் ஆடுபவர் அந்தக் குறிப்பிட்ட தெய்வமாகவே உருமாறி பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக நம்பப்படுகிறது.
பெரும்பாலும் சிறுதெய்வங்கள், வீரர்கள் மற்றும் முன்னோர்களைப் போற்றும் விதமாக இது நிகழ்த்தப்படுகிறது. விழாவில் தைய்யக் கோலங்கள் இடம்பெற்றது கேரளாவின் கிராமிய ஆன்மீக உணர்வை ஹைதராபாத்திற்கு கொண்டு வந்தது. 
கேரளாவின் இத்தகைய கலைகள் வெறும் சுற்றுலா ஈர்ப்புகள் மட்டுமல்ல; அவை அந்த மண்ணின் 800 ஆண்டுகால வரலாற்றையும், பக்தியையும் சுமந்து நிற்கும் பொக்கிஷங்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, நவீன சுற்றுலாப் பயணிகளுக்கு கேரளாவின் 'உயிர்நாடி' எது என்பதைக் காட்டும் ஒரு கலாச்சாரப் பாலமாகத் திகழ்ந்தது.
-எல்.முருகராஜ்

