PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

கொலு வைத்தால் நம் வீட்டில் அனைத்திலும் அம்பிகை எழுந்தருளுவார் என்ற ஐதீகமும் உள்ளது. இதன் காரணமாக வீட்டில் கொலு வைத்து அனைவரையும் வரவேற்று விருந்தும் பரிசும் வழங்கி மகிழ்வது நம் பண்பாடு.கொலு முதல் கொலுவில் வைப்பதற்கான சாமி பொம்மைகள் மற்றும் தலைவர்கள் பொம்கைள் கல்யாண செட் பராம்பரிய விளையாட்டைச் சொல்லும் செட் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதமாக 'லக்கிபாட்' நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் நவராத்திரி பொம்மைகள் தயராக இருக்கின்றன.புதிதாக கொலு வைக்க விரும்புபவர்கள் இங்கே வந்தால் ஏ டூ இசட் எல்லா பொருட்களையும் வாங்கிச் செல்லலாம் என நிறுவனத்தின் நிர்வாகிகள் சசி பிரியா,மஹாலட்சுமி தெரிவித்தனர்.தொடர்பு எண்:9176571011.
-எல்.முருகராஜ்.