கடந்த இரண்டு மாத கால தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன் சந்தை மீண்டும் இயல்பான சூழ்நிலைக்குத் திரும்பியுள்ளது. இரண்டு மாதங்களாக மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடலுக்கு சென்றவர்கள் நேற்று பிடித்த மீன்களுடன் கரை திரும்பினர், கடலன்னை மீனவர்களுக்கு வாரி வழங்கினார் என்பதை அவர்கள் முகத்தில் நிறைந்திருந்த மகிழ்ச்சி வெளிக்காட்டியது ,இவர்களுக்கு வஞ்சிரம், சுரா, கோழி, பரை, நெத்திலி, செப்பா உள்ளிட்ட பலவித மீன்கள் நல்ல பெரிய சைஸில் கிடைத்தன.
வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டில் கூட்டம் அள்ளும் இப்போது தடைக்காலம் முடிந்த பிறகு வரும் ஞாயிறு என்பதால் காசி மேடு களைகட்டியது.
மீனவர்கள் மற்றும் வியாபாரிகள், “தடை காலம் முடிவடைந்தது எங்கள் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. கடல் நமக்கு மீண்டும் வாழ்வாதாரம் கொடுக்கத் தொடங்கியுள்ளது,” எனத் தெரிவித்தனர்.