PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM
![]() |
தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் நடைபெறும் ஒரு தனித்துவமிக்க ஆன்மீகம் பொங்கும் நடனக் கலையாகும். கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன்,அங்குள்ள தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடுவர்.
![]() |
தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில்,அவர்கள் வணங்கும் தெய்வமே உட்புகுந்து தங்களை ஆட்டுவிப்பதாக நம்புகின்றனர்.
டிசம்பர் துவங்கி ஏப்ரல் வரை நடைபெறும் இந்த தெய்யம் நடன விழா, கோழிக்கோடு கோயிலாண்டி தலச்சியோன் கோவிலில் நடைபெற்ற போது எடுத்த படங்களே இவைகள்.
![]() |
கோவை தினமலர் புகைப்படக்கலைஞர் சதீஷ் இது போன்ற வித்தியாசமான விஷயங்களை பதிவு செய்வதில் ஆர்வமிக்கவர்,இந்த தெய்யம் நடனம் முழுவதையும் நிக்கான் மிர்ரஸ் லெஸ் கேமராவில் 50 எம்எம் 1:8 பவர் லென்ஸ் மட்டுமே உபயோகித்து எடுத்துள்ளார் அது மட்டுமின்றி நடனமாடுபவர்கள் தீயில் நடனமாடும் போது தெறிக்கும் அந்த தீ வெளிச்சத்தில் படங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.
![]() |
-எல்.முருகராஜ்