PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை-மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்ப் எனப்படும் தேசிய அளவிலான அலைச்சறுக்கு விளையாட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
கடந்த 9.10.11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 ஆண்,பெண் சர்ப்பர்கள் கலந்து கொண்டனர்.
அலைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதில் சாகசம் நிகழ்த்துபவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தைச் சார்ந்த 16 வயதான கிேஷார் குமார் முதலிடத்தைப் பெற்று யெச்டி மோட்டார் சைக்கிளை பரிசாகப் பெற்றார்,பெண்கள் பிரிவில் 16 வயதான கமலி முதல் பரிசினைப் பெற்றார்.

