சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவியர் பங்கேற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.செப்-15 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனை சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகளிலும் கல்லுாரிகளிலும் கூட கொண்டாடுகின்றனர்.பல்வேறு மாநில மாணவியர் பயிலும் எம்ஜிஆர்-ஜானகி கல்லுாரியில் இன மதவேறுபாடின்றி பல்வேறு பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.வருடந்தவறாமல் கேரளா மாநில பண்டிகையான ஒணமும் கொண்டாடப்படுகிறது.செண்டை மேளம் முழங்க மஹாபலி அரசர் வலம் வர அவர் முன்பாக மோகினி ஆட்டம்,களரிப்பயிற்சி,கை குத்து களியாட்டம்,புலி களி ஆட்டம் உள்ளீட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவியர் பல்வேறு மாநில பராம்பரிய கலை நிகழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றனர் என்று கல்லுாரி தலைவர் குமார் ராஜேந்திரன் தெரிவித்தார் கல்லுாரியில் பயிலும் 4250 மாணவியரும் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.கல்லுாரியின் நாட்டியப்பிரிவும்,தொழில் முனைவுப்பிரிவும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.