கடந்த 12 வருடங்களாக இந்தியா முழுவதும் சென்று எடுத்த பறவைகளின் படங்களை புகைப்படக் கலைஞர் அரவிந்த் வெங்கட்ராமன் சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் சென்டரில் கண்காட்சியாக வைத்துள்ளார்,சில பறவைகள் பதினைந்தாயிரம் அடிக்கு மேல்தான் வாசம் செய்யும், சில பறவைகள் ராஜஸ்தான் பாவைவனத்தில் மட்டுமே காணப்படும், சில பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே வந்து செல்லும், சில பறவைகள் கிராமத்து மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறது, சில பறவைகள் அந்தக்கால டினோசர் போன்ற வடிவங்களில் காணப்படும், இது போன்ற பறவைகளை தேடி தேடித்தான் பார்க்கவேண்டும், அது மிகவும் சுவராசியமானதாகும்.அப்படி தேடி பார்த்த பறவைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் பொதுமக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரவிந்த் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,பறவைகள் ஒவ்வொன்றும் ஒருவித குணாதிசயம் கொண்டவை அதன் சூழலை எந்த விதத்திலும் பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எதிர்கால தலைமுறைக்காக இந்த பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.கண்காட்சியின் 36 படங்களை வைத்துள்ளார் ஒவ்வொரு பறவையின் பெயர் அது இருக்குமிடம் எப்போது போனால் பார்க்கலாம் என்ற விவரத்தையும் எழுதிவைத்துள்ளார் கூடுதலாக பார்வையாளர்களுக்கு கூடவே இருந்து விளக்கமும் தருகிறார்,அனுமதி இலவசம்