PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM
![]() |
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | 17 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு; காவல்துறையினர் உட்பட 51 பேருக்கு காயம்
![]() |
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக்கிற்கு முதல் அமைச்சர் சார்பில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான காரும்,மதுரை மேயர் சார்பில் கறவை பசு மாடும் பரிசாக வழங்கப்பட்டது.இதே போல சிறந்த காளைக்கான பரிசை கார்த்திக் என்பவருக்கான காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
![]() |
மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது,மாடுபிடி வீரர்கள் பத்து சுற்றுகளாக பிரித்து விடப்பட்டனர்.காளைகளை பிடித்த வீரர்களையும்,வீரர்களிடம் பிடிபடாத காளைகளையும் பார்வையாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.போட்டியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார் உள்பட 51 பேர் மாடு முட்டி காயமடைந்தனர்.
![]() |
மேலும் பல வீரர்களுக்கும்,பிடிபடாத காளைகளுக்கும் தங்க நாணயங்கள்,சைக்கிள்,பீரோ,கிரைண்டர் உள்ளீட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
![]() |