sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...

/

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...


PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1317629அதிகம் ஆபத்தில்லாத ,அடிபடாத ஆனால் அதிவேகமான விளையாட்டு என்றால் அது டேபிள் டென்னிஸ் போட்டியாகத்தான் இருக்கும்.Image 1317630சர்வதேச போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது,அந்த சிறிய டேபிளில் பந்து பட்டு எகிறுமாறு எங்கு இருந்தோ பாய்ந்து பறந்து அவர்கள் அடிப்பதை பார்க்கும் போது பிரமிப்பாகவும்,வியப்பாகவும் இருக்கும்.Image 1317631இந்தப் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது,சென்னை நேரு ஸ்டேடியத்தில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் என்ற சர்வதேச வீரர் வீராங்கனைகளுடன் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆடினர்.Image 1317633கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டையும் பார்ப்பது இல்லை என்று நமது ரசிகர்கள் முடிவு செய்துள்ளதால் பார்வையாளர்கள் காலரி பெரும்பகுதி காலியாகவே கிடந்தது.Image 1317634தற்போது அரை இறுதியைத் தொட்டுள்ள போட்டியின் முதல் அரை இறுதி சிறப்பாக நடைபெற்றது.போட்டி ஆரம்பிக்கும் வரை மைதானத்தில் வண்ண விளக்குகள் அங்குமிங்குமாக அலை பாய்ந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளும் பின்னர் கலப்பு இரட்டையர் போட்டிகளும் மாறி மாறி விறுவிறுப்பாக நடந்தது.போட்டிகளின் முடிவுகளில் கோவா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இன்று நடைபெறும் மற்றொரு அரை இறுதிக்கு பிறகு நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இரவு 7:30 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகளானது இரவு 10 மணியளவில் நிறைவு பெறுகிறது நாளை கோப்பை வழங்குதல் போன்ற நிகழ்வுகளால் கொஞ்சம் கூடுதல் நேரமாகலாம்.,வீட்டில் உள்ள குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய்க் காட்டுங்கள் இப்படிப்பட்ட விறுவிறுப்பான விளையாட்டுகளும் இருப்பதை தெரிந்து கொள்ளட்டும்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us