திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் குதுாகலமாக துவங்கியது. ஒன்பது நாள் பிரம்மோற்சவம் முதல்நாளான நேற்று இரவு கோவிலுக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.அதே நாளான நேற்று இரவு பெரிய சேஷ வாகனம் என்று சொல்லப்படும் ஏழுதலை நாக வாகனத்தில் உற்சவரான திருமலையப்பசுவாமி மாடவீதிகளில் உலா வந்தார்.சுவாமி உலாவரும் போது அவருக்கு முன்பாக தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் இருந்து 14 குழுக்களைச் சேர்ந்த 410 ஆண் பெண் கலைஞர்கள் பங்கு கொண்டு பல்வேறு பராம்பரிய நடனங்களை நிகழ்த்தினர்.இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்துவதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வந்திருந்தார்,வந்தவர் பக்தர்களுக்கான பொது சமையலறையை துவக்கிவைத்தார்.