சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோவில் எதிரே உள்ள கலாசேத்ரா மைதானத்தில் 'ஆதி மஹோத்சவ்' என்ற பெயரில் நடந்துவரும் பழங்குடியின மக்களின் பல்வேறு தயாரிப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை இடம் பெறச்செய்வதற்காக அசாம்,மணிப்பூர்,நாகலாந்து,ஜார்கண்ட்,கர்நாடகா,இமாச்சல் உள்ளீட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைவினைகலைஞர்கள் வந்துள்ளனர்.
நெல்மணிகளால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்,அருவி போல ஒசைதரும் மூங்கில், ஒளிரும் குடுவைகள்,மூங்கில் படகுகள்,வித்தியாசமான மணிமாலைகள், மண் பாத்திரங்கள்,ஆடைகள் என்று அபூர்வமான பல பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
காலை 10:30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் நாள்தோறும் பழங்குடியின மக்களின் பல்வேறு கலாச்சார நடனங்களும் நடைபெறுகின்றது,மேலும் அவர்களின் கலாச்சார உணவுகளும் விற்கப்படுகிறது.வருகின்ற 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.