சென்னை லலித்கலா அகாடமியில் 25 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்களிப்பில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றும் அழகும் கம்பீரமும் கொண்ட உயிரோவியமாக மலர்ந்துள்ளன.வருகின்ற 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஓவியங்கள் மட்டுமின்றி புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்தை பார்வையிடும் பெண்கள் பற்றிய அக்ரிலிக் ஓவியம்,பனிபடர்ந்த மலையில் நடந்து செல்லும் ஜோடிகள் பற்றிய ஓவியங்கள்,ஒவியர் யூசுப்பின் பெண் ஓவியங்கள், வித்தியாசமாக வரையப்பட்ட கோலமிடும் பெண் ஓவியம் என்று ஒவ்வொரு ஓவியமுமே காவியமாக உள்ளன.பிரபல புகைப்படக்கலைஞர் அமர்பிரகாஷின் புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது,அதிலும் அவர் வைத்துள்ள கருப்பு வெள்ளை கலைஞர்களின் படங்கள் தனித்துவமாக காணப்படுகிறது.கண்காட்சி அனுமதி இலவசம் நேரம் பகல் 11 மணிமுதல் இரவு 8 மணிவரை.