PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

![]() |
ஆந்திரா முதல்வராக பதவி ஏற்றபின் திருமலை திருப்பதி வந்து பெருமாளை தரிசித்தார்,பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்..
ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியும் எனது குலதெய்வமாக திகழ்கிறார்,சிறுவயதில் இவரை தரிசிக்க சீனிவாச மங்காபுரத்தில் இருந்து நடந்தே வருவது வழக்கம், எனக்கு ஏற்பட்ட எத்தனையோ சோதனைகளின்போது உடனிருந்து என்னைக் காத்தவர் அவரே.அவரது பலமே இன்று நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
![]() |
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் தளர்ச்சியுற்றுள்ளது,இந்த தளர்ச்சியை நீக்கி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும், வறுமை அற்ற மாநிலமாக மாற்றவேண்டும், தொழில்நுட்பத்தில் தெலுங்கு மக்கள் உலகளவில் இன்னுமும் நிறைய சாதிப்பார்கள்.
ஒவ்வொரு இந்து பக்தருமே திருமலை வந்து பெருமாளை கட்டாயம் சந்திக்க வேண்டும், அதற்கேற்ப இலக்குகள் வகுக்கப்படும் என்றார்.
ஆந்திரப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தனது குடும்பத்தினருடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி மலைக்கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
![]() |
மலைக்கோவில் தரிசனத்தின் போது சந்திரபாபு நாயுடுவுடன் அவரது மனைவி புவனேஸ்வரி,மகனும் மாநில அமைச்சருமான லோகேஷ்,மருமகள் பிராமினி ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.அனைவரையும் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் வரவேற்றார்.