PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM

நம் ஊர் போல கோபுரமோ,கலசமோ இல்லை எவ்வித புனித நீரும் மேலே ஏறி ஊற்றப்படவும் இல்லை அவ்வளவு பிரம்மாண்டமான கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வந்து பூ துாவியதுதான் அதிகபட்ச மரியாதை.
இது எல்லாவற்றையும் ஈடுகட்டுவது போல கோவிலின் உள்ளே கருவறையில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழா களைகட்டியது.
சடங்குகள் அனைத்தையும் பிரதமர் மோடியே பயபக்தியுடன் செய்தார் முடிவில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்.
திரை விலகியதும் தெரிந்த குழந்தை ராமர் கொள்ளை அழகு,தங்க, வைர, வைடூரியத்தால் அவர் திருமேனியெங்கும் இழைத்திருந்தனர்.கையில் வைத்திருந்த வில்லும்,அம்பும் கூட தங்கம்தான்.
ஆனால் அணிந்திருந்த பொன் நகையை எல்லாம் துாக்கி சாப்பிட்டுவிடுவது போல ராமரின் புன்னகை அமைந்திருந்தது.

