sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.

/

பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.

பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.

பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.


PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1397784சென்னையில் நடந்த இந்திய பெண்கள் லீக் கால்பந்தாட்ட போட்டியில் சேது அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் லீக் (Indian Women's League - IWL) என்பது இந்தியாவின் ஆண்களுக்கான (ஐஎஸ்எல்- இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி போல இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான கால்பந்து போட்டியாகும்.Image 1397786பெண்கள் கால்பந்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்.​இந்திய கால்பந்து சம்மேளனம் (All India Football Federation - AIFF) 2016ஆம் ஆண்டில் இதைத் தொடங்கியது,Image 1397787இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களின் அணிகள் பங்கேற்கின்றன,இந்த லீக்கின் மூலம், பல திறமையான வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.​Image 1397788சேது எஃப்சி (Sethu FC)அணி என்பது தமிழ்நாட்டின் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெண்கள் கால்பந்து அணி ஆகும். இதுதான் இன்றைய தேதிக்கு தமிழகத்தின் முக்கிய அணியாகவும் விளங்குகிறது.இந்திய பெண்கள் லீக் (Indian Women's League - IWL) போட்டிகளில் பங்கேற்கும் இவ்வணி, 2018--19 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று, தேசிய அளவில் முக்கிய அங்கீகாரம் பெற்றது. ​Image 1397790சேது எஃப்சி அணியில் விளையாடிய லோய்டோங்பாம் ஆஷலதா தேவி இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்,அந்த அளவிற்கு அணி பலம் வாய்ந்து விளங்குகிறது.

இந்தியன் சூப்பர் லீக் போல இந்த அணியும் ஒடிசா,குஜராத்,டில்லி அணிகள் என்று அழைக்கப்பட்டாலும் எல்லா அணியிலும் வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.சேது அணியிலும் சில வீராங்கனைகள் அப்படி இடம் பெற்றுள்ளனர்.Image 1397789நாட்டின் பல்வேறு மாநில தலைநகர்களில் நடந்துவரும் இந்தப் போட்டி சென்னையிலும் ஒரு சீரான இடைவெளியில் நடந்துவருகிறது.நேற்று நடைபெற்ற போட்டியில் சேது அணி ஒடிசா அணியை எதிர்த்து விளையாடியது முதல் பாதியிலேயே மூன்று கோல்கள் அடித்து திறமை காட்டியது பிற்பாதியில் ஒடிசா அணியால் ஒரு கோல் மட்டுமே போடமுடிந்தத.இதன் காரணமாக சேது அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த போட்டி சென்னையில் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது அனுமதி இலவசம்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us