PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

கோவா என்றால் கடலும், கடல் சார்ந்த ஆன்மீக தலங்களும், குறைந்த விலையிலான, வித்தியாசமான மதுவும்தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்,ஆனால் அதை எல்லாம் தாண்டி அங்குள்ள மக்கள் தங்கள் மண்ணை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியாது.
ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த விழா இப்போது சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக மாறிவருகிறது.
கோவாவின் மண்ட்ரே கிராமத்தில் ஒரு மழைக்காலத்தில் கூடும் மக்கள் அங்குள்ள மண்ணில் பலவித விளையாட்டுகளை வயது வித்தியாசமின்றி விளையாடுகின்றனர்,மண்ணில் சறுக்கிச் செல்கின்றனர்,அதை எடுத்து அடுத்தவர் மீது வலிக்காமல் வீசிக் கொள்கின்றனர்,
கோயிலுக்கு அருகிலுள்ள களிமண் நிலத்தில் உடல் திறனைக்காட்டும் பலவித நிகழ்வினை நிகழ்த்துகின்றனர்.சிறியவர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்கின்றனர்.இது நட்பு, ஒற்றுமை மற்றும் இயற்கையை எப்படி அணுகுகிறார்கள்,மதிக்கிறார்கள் என்பதை உலகிற்கு பறைசாட்டுகிறது.
கோவாவின் மக்களை புரிந்து கொள்ளவும்,மாணவர்களும் இளையவர்களும் இயற்கையை உணர்ந்து கொள்ளவும் இந்த விழா பெரிதும் பயன்படுகிறது.
எப்படி செல்லலாம்?தலைநகர் பனாஜியில் இருந்து 30-35 கி.மீ.,துாரத்தில் உள்ளது மண்ட்ரோ கிராமம்.பஸ்கள், கார்கள், டாக்சி வசதிகள் உள்ளன.
இது போல் மண்ணோடு இணைந்த கலாசாரத்தையும் கொண்ட இந்த விழாவினை வாய்ப்பிருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.
-எல்.முருகராஜ்