PUBLISHED ON : ஆக 27, 2026 06:26 PM

கனடாவின் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் அமைந்திருக்கிறது 'மேரின்லேண்ட்' நீர்வாழ் உயிரியல் பூங்கா.
இங்குள்ள டால்பின்கள் உலகெங்கிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைத் தங்கள் துள்ளலான அழகாலும் சாதுரியமான சாகசங்களாலும் கவர்ந்து இழுத்தது.
ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் மனிதர்களின் பராமரிப்பில் இருந்த கடைசி டால்பின்களில் மரினாவும் ஒன்று என்பதால், அதன் இடமாற்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகக் மாறிவிட்டது.
சிறப்பு வசதிகள் கொண்ட நீர்ப்படுகை வாகனத்தில் மரினாவை மிகவும் பத்திரமாக ஏற்றுவதற்காக, வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் அதைத் தயார்படுத்தியது.
கனடாவிலிருந்து லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக ஸ்பெயினில் உள்ள நவீன நீர்வாழ் உயிரியல் பூங்காவிற்கு மரினா மாற்றப்படவுள்ளது. தனது பழைய இருப்பிடத்தை விட்டுப் பிரிந்தாலும், ஸ்பெயினில் உள்ள தனது புதிய மற்றும் பழைய கடலுலக நண்பர்களுடன் மரினா விரைவில் இணையவுள்ளது.
பழகிய இடத்தைவிட்டு பிரிய நேர்ந்தாலும் பழகிய நண்பர்களை பார்க்கப் போவதால் மரினாவின் புதிய வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும் இருக்கட்டும்.
-எல்.முருகராஜ்.
