sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

அசரவைத்த அறுபத்து மூவர் திருவிழா

/

அசரவைத்த அறுபத்து மூவர் திருவிழா

அசரவைத்த அறுபத்து மூவர் திருவிழா

அசரவைத்த அறுபத்து மூவர் திருவிழா


PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1249580


கடவுளின் சொந்த ஊர் கேரளா என்பர், அதே போல கடவுளின் சொந்த திருவிழா சென்னை கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் திருவிழாவினைச் சொல்லலாம்.

அந்த அளவிற்கு இந்த திருவிழாவினை ஊரே கூடிக் கொண்டாடுகிறது.

Image 1249582


பங்குனி உத்திர திருவிழா வந்துவிட்டால் மயிலாப்பூரில் உள்ள ஒவ்வொரு சிறிய பெரிய வீடுகளும், கடைகளும் வர்ணம் பூசி விழாக்கான களைகட்டிவிடுகிறது.

கோவிலில் குடிகொண்டிருக்கும் 63 நாயன்மார்களும் வருடத்தில் ஒரு நாள் வெளி உலகம் காண பல்லக்கில் உலா வருவதே அறுபத்து மூவர் திருவிழாவாகும்.

விழாவினைக் காண பக்தர்கள் கூடுவது பெரிய விஷயமல்ல வரக்கூடிய பக்தர்களுக்கு நாம் என்ன பிரசாதமாக வழங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பல பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவசமாக பிரசாதம் வழங்குவதுதான் திருவிழாவில் ஹைலைட்டான விஷயம்.

Image 1249583


பிரசாதம் என்றால் வழக்கமாய் சாம்பார் சாதம்,தயிர் சாதம்,புளியோதரை சாதம் என்பது போன்ற கலவை சாதங்கள்தானே கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த திருவிழாவில் ஐஸ்கீரீம்,சாக்லெட்,விசிறி,பல்வேறுவித இனிப்புகள்,காரவகைகள்,ஸ்நாக்ஸ் என்று என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் வாரி வழங்கினர்.வாங்கக்கூடிய பக்தர்கள் இங்கே என்ன கொடுக்கிறார்கள் என்று பார்த்து விசாரித்துவிட்டே வாங்குகின்றனர்.

Image 1249581


ஒவ்வொரு தெருவிலும் மக்கள் அடர்த்தியாய் அறுபத்து மூவரை தரிசிக்க திரண்டு இருந்தனர்,கயிலை நடனமாடிய சிவனடியார்கள் காத்திருந்த கூட்டத்தினரிடையே பக்தி பரவசத்தையும் மகிழ்ச்சி வெள்ளத்தையும் பரப்பினர்.

கோவிலை விட்டு மதியம் கிளம்பிய அறுபத்து மூவர் ஊர்வலம் இரவில்தான் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us