PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

திருமலை திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்டமான ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா நாளை 4ஆம் தேதி துவங்கி வருகின்ற 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாளை மாலை 5:45 மணி முதல் 8 மணிக்குள் கோவிலுக்குள் கொடியேற்றம் நடைபெறும்.துவஜாரோஹணம் என்றழைக்கப்படும் இந்த கொடியேற்றம் கருவறைக்கு எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தின் நடைபெறும், கருடன் (மகா விஷ்ணுவின் வாகனம்) படத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.பிரம்மோத்ஸவ விழாவில் கலந்து கொள்ள அனைத்து தெய்வங்களுக்கும் முறையான அழைப்பை விடுவதன் அடையாளமே இந்த கொடியேற்றம்.
05/10/24 ஆம் தேதி இரண்டாம் நாள் காலை 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா. அன்று இரவு ஹம்ச என்று அழைக்கப்படும் அன்ன வாகனத்தில் உலா.
06/10/24 ஆம் தேதி மூன்றாம் நாள் காலை சிம்ம வாகனம்:இரவு முத்து பந்தல் வாகனம்
07/10/24 ஆம் தேதி நான்காம் நாள் காலை கற்பக விருட்ச வாகனம்:அன்று இரவு சர்வ பூபாள வாகனம்.
08/10/24 ஆம் தேதி ஐந்தாம் நாள் காலை மோகினி அவதாரம்:அன்று இரவு கருட வாகனம்.இந்த தங்க கருட வாகனத்தில் வரும் போது மூலவர் அணிந்திருக்கும் நகைகள் பலவும் அணிந்து வருவதால் மூலவரே வருவதாக கருதுவர் இதன் காரணமாக பல மடங்கு பக்தர்கள் கூடுவர்.
10/10/24 ஆம் தேதி ஏழாம் நாள் காலை சூர்ய பிரபா வாகனம்:அன்று இரவு சந்திர பிரபா வாகனம்.
11/10/24 ஆம் தேதி எட்டாம் நாள் காலை தேரோட்டம்:அன்று இரவு குதிரை வாகனம்.