தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்தனைக் களம்/காசி - தமிழகம் இடையே பண்பாட்டு பாலம் திருக்குறள்

காசி - தமிழகம் இடையே பண்பாட்டு பாலம் திருக்குறள்

காசி - தமிழகம் இடையே பண்பாட்டு பாலம் திருக்குறள்

1


PUBLISHED ON : நவ 22, 2026 01:04 AM

Follow on GoogleFavourite on Google

1

PUBLISHED ON : நவ 22, 2026 01:04 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ சாமு கிருஷ்ண சாஸ்திரி

தலைவர், பாரதிய பாஷா சமிதி

சில நுால்கள், எழுதப்பட்ட காலத்தின் தேவைகளை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றன. வெகு சில நுால்கள் மட்டுமே, இன்னும் பிறக்காத தலைமுறைகளுடனும் தொடர்ந்து உரையாடும் ஆற்றல் பெற்றுள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முன், தமிழ் கவிஞரும், தத்துவஞானியுமான திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், அத்தகைய சிறப்புமிக்கது.

அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ள, 1,330 குறள்களும், மனித வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. மனித வாழ்வின் அடிப்படையான பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.

நேர்மையுடன் வாழ்வது, பொறுப்புகளை நிறைவேற்றுவது, அறிவார்ந்த முறையில் தலைமை தாங்குவது, சக மனிதர்களிடம் நடந்துக்கொள்வது, சமூகத்திற்கு பங்களிப்பது போன்ற வாழ்வின் முக்கிய அம்சங்களை திருக்குறள் எடுத்துரைக்கிறது.

பல நுாற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதில் பொதிந்துள்ள வாழ்வியல் சிந்தனைகளும் அறிவுரைகளும், இன்றும் மிகவும் பொருத்தமுடையவையாகத் திகழ்கின்றன.

எனவே தான், தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு, 'திருக்குறள் பயில்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

திருக்குறளின் ஞானத்தையும், வாழ்வியல் நெறிகளையும் பரந்துபட்ட மக்களிடம் கொண்டுச் செல்ல, இந்த முன்னெடுப்பு முயல்கிறது.

ஆன்மிகப் பயணங்கள்


அதேவேளையில், காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, பல நுாற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பண்பாட்டு மற்றும் அறிவுசார் உறவையும் கொண்டாடுகிறது.

பாரத நாகரிகத்தின் தொன்மையான இரு மையங்களான காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பு, ஆன்மிகப் பயணங்கள், கல்விப்புலமை, இலக்கியம், தத்துவம் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் வாயிலாக, தொடர்ந்து வ ளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அறிவையும், ஆன்மிக புரிதலையும் தேடுபவர்களை, காசி நெடுங்காலமாகத் தன்பால் ஈர்த்துள்ளது. அதேபோல், பாரதத்தின் இலக்கிய, தத்துவ மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்களுக்கு, தமிழகம் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது.

'காசி தமிழ் சங்கமம் - 5.0'-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, இளம் தலைமுறையினரை, திருவள்ளுவரின் சிந்தனைகளுடனும், வாழ்வியல் நெறிகளுடனும் இணைப்பதாகும்.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான பங்கேற்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் திருக்குறளை படித்து, அதன் வாழ்வியல் கோட்பாடுகளை இன்றைய சவால்களுக்குப் பொருத்தி புரிந்துகொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவர்.

திருக்குறள், ஒரு தேசிய அறிவுசார் வளமாக முழு பயனை அளிக்க வேண்டுமானால், அது நாடு முழுதும் உள்ள மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், புரியக்கூடியதாகவும் அமைய வேண்டும்.

கலந்துரையாடல்கள்


இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும், திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சி, இதற்கான முக்கிய முன்னெடுப்பாகும்.

இதன் மூலம், பல்வேறு மொழி மற்றும் பண்பாட்டு பின்னணிகளை கொண்ட மாணவர்களும், வாசகர்களும் திருவள்ளுவரின் சிந்தனைகளை நேரடியாக அறியும் வாய்ப்பைப் பெறுவர்.

தமிழ் இலக்கிய மரபில் வேரூன்றியுள்ள திருக்குறளை, அறநெறிகள் மற்றும் குடிமக்களின் கடமைகள் குறித்த தேசிய உரையாடலுடன் இணைப்பதற்கு இது வழிவகுக்கிறது.

காலம் கடந்து காசியும், தமிழகமும் ஒன்றிணைந்து நிற்பது, பாரதத்தின் பண்பாட்டு அடையாளம் குறித்த விரிவான செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கிறது. பாரத நாகரிகம் என்பது, பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மக்கள், சிந்தனைகள் மற்றும் மரபுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதன் மூலம் வளர்ந்ததாகும்.

வெவ்வேறு மொழிகள், சமூகங்கள் மற்றும் அறிவுசார் மரபுகள் இணைந்து வாழ்வதிலும், பரஸ்பரம் கலந்துரையாடுவதிலுமே, இதன் வலிமை அடங்கியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் கலைஞர்களிடையே நடைபெறும் கலந்துரையாடல்கள் மூலம், காசி தமிழ் சங்கமம், இந்த உயரிய உணர்வைக் கொண்டாடுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் வரலாறுகளையும், பங்களிப்புகளையும் மக்கள் மதிக்கும் போது தான், தேசிய ஒருமைப்பாடு உண்மையான பொருளைப் பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us