sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/வீடு கட்டுகிறீர்களா? கம்பிகள் தேர்வில் கவனம்

வீடு கட்டுகிறீர்களா? கம்பிகள் தேர்வில் கவனம்

வீடு கட்டுகிறீர்களா? கம்பிகள் தேர்வில் கவனம்


ADDED : நவ 21, 2020 02:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2020 02:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டடங்கள் கட்டுவதில் கம்பிகளின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதில், கட்டுமானத்தின் தன்மை, அளவுக்கு ஏற்ப கம்பிகளை தேர்வு செய்வது அவசியம்.

இன்றைய சூழலில் பல்வேறு நிறுவனங்கள், டி.எம்.டி., கம்பிகள் தயாரிப்பு, விற்பனையில் இறங்கியுள்ளன. இதில், உங்கள் கட்டடத்துக்கான தேவை, பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில், கம்பிகளை தேர்வு செய்வது அவசியம். துாண்கள், பீம்கள் அமைப்பதில், நான்கு கம்பிகள் தேவையா, ஆறு கம்பிகள் தேவையான என்பதை கட்டட வடிவமைப்பாளர், கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவு செய்யுங்கள். இதில், ஆறு கம்பிகள் உடைய துாண்கள் எனில், கம்பிகளின் தடிமன் குறையும். நான்கு கம்பிகள் எனில், தடிமன் அதிகரிக்கும்.

பெரும்பாலான சமயங்களில், வீடு கட்டுவோர், நிதி சார்ந்த நெருக்கடிகளை கருத்தில் வைத்து, அப்போது கட்டும் கட்டடத்தின் மொத்த சுமைக்கு ஏற்ப, கம்பிகளை தேர்வு செய்கின்றனர். இது, பிற்காலத்தில் விரிவாக்க பணிகளின் போது சிக்கலை ஏற்படுத்தும்.குறிப்பாக, நீங்கள் தற்போது தரைதளம் வரையிலான வீட்டை கட்டுவதாக இருந்தாலும், அந்த நிலத்தில் விதிகளுக்கு உட்பட்டு, எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்துக்கு கட்டடம் கட்ட முடியுமோ, அதற்கு ஏற்ற கம்பிகளை தேர்வு செய்வது நல்லது. கம்பியை மட்டும் தேர்வு செய்தால் போதாது; அதற்கு ஏற்ற வகையில், கான்கிரீட் கலவையின் தன்மை சரியாக இருக்க வேண்டும்.

கம்பிகளை வாங்கியாகி விட்டதுடன் பணிகள் முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். அந்த கம்பிகளை சரியான அளவுகளில் வெட்டி, வளைத்து கூடுகளை உருவாக்க வேண்டும். இதில், கம்பிகளை வெட்டி, வளைப்பது, பணியாளர்களின் பொறுப்பு தான் என்பதில் மாற்று கருத்து இலலை. அதே நேரத்தில், உரிமையாளர் என்ற முறையில், கம்பி வளைப்பு பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

சில சமயங்களில், பணியை எளிமைப்படுத்துவதற்காக கம்பி வளைப்போர், அதில் என்ணெய் தடவுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்று எண்ணெய் தடவி வளைப்பதால், கம்பியில் கான்கிரீட் ஒட்டுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, கம்பி வளைப்பு பணிகளின் போது, பணியாளர்கள் நிலையில் ஏதாவது குறைபாடுகள் ஏற்படுகிறதா என்பதையும், உரிமையாளர்கள் கவனிப்பது அவசியம். இதில், கவனமாக இருந்தால், கட்டடத்தின் பாதுகாப்பு உறுதியாகும் என்கின்றனர், கட்டுமான துறை பொறியாளர்கள்.

அளவுக்கு மீறினால்...

வீட்டு வரைபடத்தை முடிவு செய்தபின், ஒரு கட்டட பொறியாளர் அல்லது கட்டட வல்லுநர் போன்றோரை அணுகி, வீட்டுக்கு எந்தளவு கம்பி, எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து பயன்படுத்துங்கள். தேவையில்லாமல், அதிகளவு கம்பிகளை உபயோகித்து, பணத்தை வீணாக்காதீர்கள். அளவுக்கு மீறினால் அதுவும் தவறுதான். கம்பிகள் அதிகமாக இருந்தால் அதிக வெயில்படும் இடங்களில் கீறல்கள் தோன்ற வாய்ப்பு அதிகம். ஏனென்றால், கான்கிரீட்டை விட கம்பிக்கு வெப்பத்தால் விரிவடையும் தன்மை அதிகம்.அடுத்த கட்டடங்களை பார்த்து கம்பி களை நிர்ணயிக்காதீர்கள். உங்கள் கட்டிடத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ப மதிப்பீடு செய்து பயன்படுத்துங்கள். கம்பிகளை வாங்கும்போது தரமான கம்பியை பார்த்து வாங்குங்கள். இதற்கு, துறை சார்ந்த வல்லுனரை ஆலோசிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us