தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/ 4 சட்டசபை தொகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்., 6 வரை வேட்பு மனு கலெக்டர் பொற்கொடி தகவல் 

 4 சட்டசபை தொகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்., 6 வரை வேட்பு மனு கலெக்டர் பொற்கொடி தகவல் 

 4 சட்டசபை தொகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்., 6 வரை வேட்பு மனு கலெக்டர் பொற்கொடி தகவல் 


ADDED : மார் 17, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ல் துவங்கி ஏப்., 6 வரை நடைபெறும். ஏப்., 9 அன்று தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கலெக்டர் கே.பொற் கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஏப்.,9ல் இறுதி வேட்பாளர் பட்டியல் காரைக்குடி, திருப்புத்துார், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 5,44,035 ஆண், 5,66,526 பெண், இதரர் 38 பேர் என 11,10,599 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 1,518 ஓட்டுச்சாவடிகளில் ஏப்., 23 அன்று தேர்தல் நடைபெறும்.

மார்ச் 30 முதல் வேட்பு மனு தாக்கல் பணி துவங்கி, ஏப்., 6 வரை பெறப்படும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை அந்தந்த சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஏப்., 7 அன்று வேட்பு மனு பரிசீலனை, ஏப்., 9 ல் வேட்பு மனு திரும்ப பெறலாம், அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர், கட்சி கொடி, சின்னங்களை தேர்தல் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். பொது இடங்களில் உள்ள கட்சி கொடி, சின்னங்கள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.

தனியார் இடங்களில் வரைந்த சின்னங்கள் 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படும். தொகுதி முழுவதும் நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 18004 257036 மற்றும் 1950 என்ற இலவச எண்ணிற்கு தேர்தல் விதிமீறல் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.

மார்ச் 30 முதல் ஏப்., 6ம் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து தினமும் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். சட்டசபை தேர்தல் அமைதியாக, நேர்மையாக நடைபெற சர்வ கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி பார்த்துக்கொள்ள அரசு செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து சட்டசபை தொகுதிகளில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகள் விபரங்களை தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு பின் தெரிவிக்கப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உடனிருந்தார்.

சோதனை சாவடிகளில் கண்காணிப்பு சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் கூறியதாவது, மாவட்ட எல்கைகளில் 14 சோதனை சாவடிகள் அமைத்து, 'சி.சி.டி.வி., கேமரா மூலம் வாகனங்களை கண்காணிக்கிறோம். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படையினர் 80 வீரர்கள் வந்துள்ளனர்.

இது வரை 10 முக்கிய இடங்களில் அணிவகுப்பு சென்றுள்ளோம். தேர்தல் கமிஷன் உத்தரவுபடி பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தலா ஒரு ஓட்டுச்சாவடிக்கு எஸ்.ஐ., உட்பட 5 துணை ராணுவ படையினர் நியமிக்கப்படுவர் என்றார்.

ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால்....

மாவட்ட அளவில் 4 சட்டசபை தொகுதிகளில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட ஜி.பி.எஸ்., கருவியுடன் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தகவல் கிடைத்த 15 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்ய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும். 50 நிமிடத்திற்குள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட வேண்டும். பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி இருப்பதால் வாகனங்களை நிறுத்தி வைக்காமல், தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்க வேண்டும். சோதனையின் போது சிக்கும் பணத்தில் ரசீதின்றி ரூ.50,000 க்கு மேலாகவும், ரசீதின்றி ரூ.10,000க்கு மேல் பரிசு பொருட்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்யலாம். வாகனத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் வாகனத்துடன் அப்பணத்தை பாதுகாப்புடன் வைத்து வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us