தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/சிந்திப்போமா/ பறிமுதல் வாகனங்களால் பொலிவிழந்த காவல் நிலையம்

 பறிமுதல் வாகனங்களால் பொலிவிழந்த காவல் நிலையம்

 பறிமுதல் வாகனங்களால் பொலிவிழந்த காவல் நிலையம்


ADDED : பிப் 19, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: சோளிங்கர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காவல் நிலைய வளாகத் தில், பறிமுதல் வாகனங்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், வெள்ளாத்துார் கூட்டுச்சாலை அருகே ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இக்காவல் நிலையத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்தில் காலியாக இருந்த இடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலையை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, பூங்கா போன்ற தோற்றத்தில் அழகுபடுத்தப்பட்டது. ஆனால், தற்போது அந்த இடம், பறிமுதல் வாகனங்களை நிறுத்தி வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.

எனவே, விபத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வேறு இடத்திற்கு இடமாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us