உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 30, 2021

அ நிறம் | அளவு
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., போன் வைத்திருப்பவர்கள், இனி டுவிட்டர் வாயிலாக, 4கே படங்களை வலையேற்றம் செய்ய இயலும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன், 2,048 x 2,048 பிக்சல் வரையிலான படங்களை மட்டுமே சப்போர்ட் செய்துவந்த நிலையில், இப்போது, 4கே படங்களையும் சப்போர்ட் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த சேவையை எப்படி பெறுவது?
* ஸ்மார்ட்போனில் டுவிட்டர் செயலியை ஓப்பன் செய்யவும்
* அடுத்து அதிலிருக்கும் செட்டிங் அண்டு பிரைவசிக்கு செல்லவும்
* ஜெனரல் எனும் பகுதியில் இருக்கும் டேட்டா யூசேஜ் என்பதை ஓப்பன் செய்யவும்
* அதில், ஹை குவாலிட்டி இமேஜ் அப்லோடு என்பதை தேர்வு செய்யவும்.
இதன் பின், நீங்கள் தாராளமாக உங்கள், 4கே படங்களை அப்லோடு செய்யலாம்.
