உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 31, 2021

அ நிறம் | அளவு
'ஆப்பிள் மியூசிக்' இந்தியாவில், லாஸ்லெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ், ஸ்பேஷியல் ஆடியோ ஆகிய வசதிகளை வழங்கி உள்ளது. ஆப்பிள் மியூசிக் அதன் வாடிக்கையாளர்களுக்கு மேற்சொன்ன வசதிகளை வழங்குகிறது. ஆப்பிள் மியூசிக் வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
ஐ.ஓ.எஸ்., ஐபேடு ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., ஆப்பிள் டிவி ஆகிய சாதனங்கள் அனைத்துக்கும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை, அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளில் கடந்த ஜூன் முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில், இப்போது அறிமுகம் ஆகியுள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்த சேவை வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எப்போது என தெரிவிக்கவில்லை.
