தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/வாரி வழங்கிய 'ஆப்பிள்'

வாரி வழங்கிய 'ஆப்பிள்'

வாரி வழங்கிய 'ஆப்பிள்'


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆப்பிள்' நிறுவனம், அண்மையில் நடந்த 'சர்வதேச டெவலப்பர்'கள் மாநாட்டில், பல்வேறு புதிய அறிமுகங்களை அறிவித்தது. குறிப்பாக, மென்பொருள் சம்பந்தமான ஏராளமான 'அப்டேட்'களை வாரி வழங்கி உள்ளது.

'ஐ.ஓ.எஸ்., 16' அறிமுகம் இதில் குறிப்பிடத்தக்கதாகும். ஐ.ஓஎஸ்., 16ல் மேம்பட்ட லாக் ஸ்கிரீன், வால்பேப்பர், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், ஆப்பிள் மேப் என பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

அடுத்து, 'மேக்' சாதனங்களுக்கான 'மேக் ஐ.ஓ.எஸ்., வெண்ட்யுரா!' இதிலும் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்து உள்ளது.அத்துடன், புதிய 'எம்2 சிப்செட்' அறிமுகம் ஆகியுள்ளது. இதற்கு முன் வந்த 'எம்.1' பிராசஸரை விட இது மேம்பட்டதாகும்.

மேலும், புதிய 'மேக்புக் ஏர்' மற்றும் 13 அங்குல 'மேக்புக் ப்ரோ' ஆகிய மாடல்களும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. கூடவே, 'வாட்ச் ஓ.எஸ்., 9' பல புதிய அம்சங்களுடன் வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 'ஐபேடு ஓ.எஸ்., 16' மல்டி டாஸ்கிங் வசதியுடன் வந்துள்ளது. மொத்தத்தில், ஆப்பிள் அதன் தயாரிப்பில் பல மேம்படுத்தப்பட்ட அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us